For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: LKK vs IDTT - 1 ரன் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி த்ரில் வெற்றி!

08:27 AM Jul 08, 2024 IST | Web Editor
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்  lkk vs idtt   1 ரன் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி த்ரில் வெற்றி
Advertisement

திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான் லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

Advertisement

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது. இதனையடுத்து இரவு 7.15 மணிக்கு லைகா கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி,  முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சாருகான் 55 ரன்களும், சச்சின் 30 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 161ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே குவித்தது. இதில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 81 ரன்கள் எடுத்தார். கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றிப் பெற்றது.

Tags :
Advertisement