For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரத ரத்னா விருது பெறும் எல்.கே.அத்வானி - யார் இவர்?

01:27 PM Feb 03, 2024 IST | Web Editor
பாரத ரத்னா விருது பெறும் எல் கே அத்வானி   யார் இவர்
Advertisement

பாரத ரத்னா விருது பெறும் எல்.கே.அத்வானி யார் என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.  எல்.கே.அத்வானி யார்.. .இந்திய அரசியலில் அவரது பங்களிப்பு என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்....

எல்.கே.அத்வானி யார்..?

  • சுதந்திரத்திற்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியா மற்றும் தற்போதைய பாகிஸ்தான் பகுதியான கராச்சியில் 1927ம் ஆண்டு அத்வானி பிறந்தார்.
  • மும்பை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார்.
  • அத்வானிக்கு மனைவி மற்றும் இரண்டுகள் மகள்கள் இருந்தனர்.  இவரது மனைவி 2016ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.
  • 1940-ம் ஆண்டில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் தனது 14வயதில் ஆர்.எஸ்.எஸ் இல் இணைந்தார்
  • 1951-ல் ஷியாம பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்ட ஜனசங்கம் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
  • 1951 முதல் 1970 வரை டெல்லி மாநகர ஜனசங்க செயலாளர்,  தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்தார்.
  • 1971-75 காலகட்டத்தில் ஜன சங்கத்தின் சார்பில் முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1977-ல் மத்தியில் அமைந்த ஜனதா ஆட்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
  • 1981-89 காலகட்டத்தில் ஜனசங்கத்தின் பெயரை மாற்றி வாஜ்பாய் உள்ளிட்டோருடன் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியைத் துவங்கினார்.
  • 1990களின் முற்பகுதியில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான ரத யாத்திரையின் மூலம் கட்சியை தேசிய கவனம் ஈர்க்க வைத்தார்.
  • 1999 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த அரசில் உள்துறை அமைச்சராகவும் , துணைப் பிரதமராகவும் செயல்பட்டார்
  • 2004-2009 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
  • 2009-ல் காந்தி நகர்  தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2014ல் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 7வது முறையாக மக்களவைக்கு சென்றார்
  • 2015-ல் பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது
  • 2024-ல் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
Advertisement