Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக பணக்கார நகரங்களின் பட்டியல் - நியூயார்க் தொடர்ந்து முதலிடம்!

02:20 PM May 08, 2024 IST | Web Editor
Advertisement

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. 

Advertisement

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.  இந்தப் பட்டியல்,  அந்நகரங்களில் வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு வரிசைப்படுத்தப்படுகிறது.  இதில் 2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  கடந்த ஆண்டும் நியூயார்க் நகரம் முதலிடத்தை பிடித்திருந்தது.

நியூயார்க் நகரத்தை தொடர்ந்து பே ஏரியா தொழில்நுட்ப மையம் (சான் பிரான்சிஸ்கோ) 2வது இடத்தை பிடித்துள்ளது.  Airbnb,  Alphabet,  Apple,  Intel,  Meta,  Netflix,  Nvidia மற்றும் Uber போன்ற உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளன.

இப்பட்டியலில் டோக்கியோ 3வது இடத்தையும்,  சிங்கப்பூர் 4 வது இடத்தையும்,  லண்டன் 5வது இடத்தையும் பிடித்துள்ளன.  தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் 6 வது இடத்தையும், பாரிஸ் 7 வது இடத்தையும்,  சிட்னி 8 வது இடத்தையும்,  ஹாங்காங் 9 வது இடத்தையும், பெய்ஜிங் 10 வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆசிய பசிபிக் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பெங்களூரு சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது.  “கார்டன் சிட்டி” மற்றும் “இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு” என்றும் அழைக்கப்படும் பெங்களூரு தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வருகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Tags :
CitiesTop 10 Citiesworld
Advertisement
Next Article