வெளியானது பிரபலமான முதலமைச்சர்கள் பட்டியல்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம்?
பிரபல ஆங்கில டிவி சேனலான ' இந்தியா டுடேவும்', சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து பிரபலமான முதலமைச்சர்கள் குறித்த கருத்துக்கணிப்பை நாடு முழுவதும் நடத்தியது. அதில் இந்திய அளவிலும், மாநிலங்களிலும் சிறந்த முதல்வர்கள் குறித்தும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சொந்த மாநிலங்களில் பிரபலமான முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் இடத்தையும், இந்திய அளவில் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்த ஆய்வின்படி (சொந்த மாநிலங்களில்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 36% -ஆக இருந்த பிரபலத்துவம், 2025 பிப்ரவரியில் 57% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் 62 சதவீத பிரபலத்துவத்துடன் முதலிடத்திலும், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா (55 சதவீத பிரபலத்துவம்) மூன்றாவது இடத்திலும், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் (54 சதவீதம்) 4வது இடத்திலும், ஆந்திர பிரதேச முதலமைச்சசர் சந்திரபாபு நாயுடு 5வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அளவில் பிரபலமான முதலமைச்சர்கள்
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்