2023-ம் ஆண்டின் சிறப்பான செயல்பாடுகள்: சிறப்புப் பட்டியலில் 3 இந்திய விமான நிலையங்கள்!
2023 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலகளாவிய விமான நிலையங்களில் 3 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகளாவிய விமானப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம், 2023 ஆம் ஆண்டின் சிறப்பாகச் செயல்பட்ட விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மூன்று இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு விமானம் அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் (அதாவது விமானத்தின் வருகை மற்றும் புறப்படும் நேரம் 15 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்) செயல்படுவதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதில், இந்தாண்டுக்கான பட்டியலில் அமெரிக்காவின் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 168, 426 விமானங்களை கையாண்டு 84.42% OTP உடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் 237,461 விமானங்களை கையாண்டு 84.08% OTP உடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் நடுத்தர விமான நிலையங்கள் பிரிவில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.