Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்!

அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
04:33 PM Mar 02, 2025 IST | Web Editor
Advertisement

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை மறுநாள் ( மார்ச் 4) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

"சமூகத்தில், ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதைப் போதித்த அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினம், வரும் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது.

அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென்மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலியுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
AnnamalaicloseddistrictleaveliquorshopstweetVaikuntar Avatar DayVirudhunagar
Advertisement
Next Article