Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிபிஐ கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு!

12:48 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Advertisement

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கெஜ்ரிவாலை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து அவரது காவல் முடிவடைந்த நிலையில், கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, கெஜ்ரிவாலை 14 நாட்கள்(ஜூலை 12-ந்தேதி வரை) நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  இந்த நிலையில், மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Tags :
Aravind KejjivalCBIDelhiDelhi Liquor Cycase
Advertisement
Next Article