Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?" - அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!

07:38 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு? என அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisement

கள்ளக்குறிச்சியில், கடந்த ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 73 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.
பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தே நடந்துள்ளதாகவும், தங்களது பணியை செய்யாத போலீசார் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : பயணிகள் கவனத்திற்கு… திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயில் சேவை ரத்து! #SouthernRailway அறிவிப்பு!

கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு கள்ளச்சாராயம்
வருவதாகவும் எனவே இது தொடர்பாக சிபிஐ- ஆல் மட்டுமே விசாரிக்க முடியும்
எனவும் சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தவறு செய்தவர்கள் தப்பிவிடுவார்கள் எனவும்
குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக வெறும் குற்றச்சாட்டு மட்டுமே சொல்லப்பட்ட அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால்
கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துததற்கு ஆதாரமாக 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பினார்.வாதங்கள் நிறைவடையாததை அடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 10ம்
தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags :
AIADMKCBIHigh courtkallakuruchiliquor caseNews7Tamilnews7TamilUpdatesquestion
Advertisement
Next Article