Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம்!

07:47 AM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.  அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையும் படியுங்கள்: உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!

இதையடுத்து நேற்று (ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில்,  திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

திருநெல்வேலியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 67 மாநகர பேருந்துகளில் 60 பேருந்துகள் இயக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை தாமிரபரணி புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில் 55 பேருந்துகளில் 35 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தாமிரபரணி பணிமனையில் 55 பேருந்துகளில் 45 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள 18 பணிமனைகளில் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தாலும், நெல்லை மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல், குறித்த நேரத்திற்கு அந்தந்த பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Tags :
BUSnews7 tamilNews7 Tamil UpdatesstrikeTirunelveliTN Govttransport strike
Advertisement
Next Article