Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை விவகாரம் - டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் #Suspend!

08:32 AM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை புகாரில், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற ஆயுள் தண்டனை கைதியை, சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டில் சட்ட விரோதமாக வேலைக்கு அமர்த்தியதுடன், ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை வீட்டில் இருந்து திருடியதாக அடித்து கொடுமைப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆயுள் தண்டனை கைதியின் தாயார் புகாரை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன், சிறை தனி பாதுகாப்பு அதிகாரி அருள்குமரன், டிஐஜி ராஜலட்சுமியின் பாதுகாவலர் ராஜு, சிறை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி சிறை வார்டன்களான சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

குறிப்பாக 115(2) - பிறருக்கு காயம் ஏற்படுத்துதல், 118(2) - ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல், 146 - சட்ட விரோதமாக கட்டாய வேலை வாங்குதல்,127 - சட்டவிரோத சிறைவைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 10, 11 தேதிகளில் அவர் தலைமையில் சேலம் மற்றம் வேலூர் சிறைகளுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹமான் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேலூர் சிறைத்துறை ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ, சிறைக் காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோர் சென்னை எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ, சிறைக் காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோர் கடந்த மாதம் 17 ஆம் காலை 10.30 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்ட சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரஹமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
DIG RajalakshmiPrisonsuspend
Advertisement
Next Article