வெளியானது 'விடுதலை 2' திரைப்படம் - ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திகைத்த ரோகிணி திரையரங்கம்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில்
உருவான 'விடுதலை 2' திரைப்படத்தின் ரிலீசை ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடினர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்
பெற்றது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகின. இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இப்படத்தின் ரிலீசை ரசிகர்கள் மேளம் தாளம் முழுங்க உற்சாகமாக கொண்டாடினர். சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்த நிலையில் மழையையும் பொறுப்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் சிறப்புக் காட்சிகளைப் பார்த்து ரசித்தனர்.