Pride மாதக் கொண்டாட்டம் - வானவில் வண்ணங்களில் ஒளிர்ந்த சென்னை ரிப்பன் மாளிகை!
சர்வதேச Pride மாதத்தை நினைவுகூரவும், LGBTIQA பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை ரிப்பன் மாளிகை வானவில் வண்ணங்களில் ஔிரவிடப்பட்டுள்ளது.
தன் பாலின மற்றும் பால் புதுமையின LGBTQIA மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி ஜூன் மாதத்தை பிரைட் மாதமாக கொண்டாடுகிறார்கள். இந்த மாதத்தில் உலகம் முழுவதும் LGBTQIA மக்களுக்கு ஆதரவாகவும், சமூகத்தில் அவர்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்தும் பேரணி நடத்துவார்கள்.
அந்தவகையில், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானவில் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான வானவில் சுயமரியாதை பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான LGBTQIA மக்கள் பங்கேற்றனர்.வானவில் சுயமரியாதை பேரணியில் சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் :ஏசி காரில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளுடன் காரைக் கடத்திய கொள்ளையர்கள் - சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்ட போலீஸ்!
இந்நிலையில், ஜூன் மாதத்தில் சர்வதேச ப்ரைட் மாதத்தை நினைவுகூரவும் மற்றும் LGBTIQA பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வானவில் வண்ணங்களில் ஔிரவிடப்பட்டுள்ளது.