For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் - நடவடிக்கை கோரி கடிதம்!

02:03 PM Jun 19, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம் பி அப்துல்லாவை தடுத்து நிறுத்திய cisf காவலர்   நடவடிக்கை கோரி கடிதம்
Advertisement

நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது சிஐஎஸ்எஃப் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால்,  நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

மாநிலங்களவைத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “நேற்று பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போது, அங்கு பணியில் இருந்த CISF அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தி நாடாளுமன்றத்துக்கு தான் வந்ததன் நோக்கம் என்ன என விளக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ காரியங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.  மேலும் எனக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால்,  அதை நான் எனது தலைமை பொறுப்பில் இருப்பவரிடம் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உள்ள ஒருவரிடம், CISF பாதுகாவலர்களின் இந்த நடத்தையால் தவறு. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாவலர்கள் பணியில் இருந்த போது இதுபோன்ற தவறான நடத்தை இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது.

என்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்கள் மற்றும் தவறிழைத்த அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் உறுதி செய்யவேண்டும்” இவ்வாறு அந்த கடிதத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement