"அரசியல் பற்றி பின்னர் பார்க்கலாம்" - கோவையில் நடிகர் #Sivakarthikeyan பேட்டி!
சினிமாவில் நிறைய ரோல் உள்ளது, எனவே அரசியல் பற்றி பின்னர் பார்ப்போம் என செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'அமரன்'. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் , நடிகை சாய்பல்லவி , ஸ்ரீ , உமர் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படம் ரிலீஸுக்கு முன்பே தரமான சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் அமரன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை ₹75 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : புதிய உச்சத்தில் #GoldRate | பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 'அமரன்' திரைப்பட புரோமோஷன் நடைபெற்றது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் 'அமரன்' படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது :
"என்னுடை கல்லூரி காலத்திற்கு கல்லூரிக்கு நேரத்திற்கு போனதே இல்லை. ஆனால், இங்கு 8.45 மணிக்கு வந்து விட்டேன். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற காரணத்தினால் தான், நான் இந்த மேடையில் நிற்கிறேன். கல்லூரி காலத்தை அனுபவியுங்கள். கல்லூரி கலாம் மீண்டும் கிடைக்காது.
மேஜேர் முகுந்த், இந்தியன் ஆர்மி போன்ற வார்த்தைகள் கூறும்போது உங்கள் கைதட்டுக்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ராணுவத்தினருக்கு மரியாதை கொடுப்பது மிக முக்கியமானது. அதை இங்கு பார்த்துவிட்டேன். படப்பிடிப்பில் நான் அணிந்திருந்த ராணுவ உடை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால், படத்தின் நினைவாக அந்த ராணுவ உடையை எடுத்துக்கொண்டேன். குறிப்பாக , அந்த உடையில் உள்ள முகுந் என்ற நேம் போர்டு எனக்கு ரொம்ப பிடித்தது.
காமெடி, கலாய்ப்பது என் கூட பிறந்து விட்டது. ராணுவ உடை அணிந்த பிறகு எனக்குள் சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முகுந் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும். ஆனால் இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம்"
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள் : LubberPandhu | படக்குழுவினருக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு!
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்தித்து பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியதாவது :
விஜய் அரசியலுக்கு வந்தது போல் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு?
"சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் நிறையாக உள்ளது. அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் உங்களை பார்த்து காண்பித்த சிம்பல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு?
" கோட் திரைப்படத்தில் துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன். அதைதான் மாணவர்கள் தங்களது கைகளை உயர்த்தி என்னிடம் காண்பித்தனர்."
இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.