For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சத்தம் பத்தாது விசில் போடு..!” - விஜய் குரலில் வெளியானது ‘GOAT’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

06:17 PM Apr 14, 2024 IST | Web Editor
“சத்தம் பத்தாது விசில் போடு   ”   விஜய் குரலில் வெளியானது ‘goat’ ஃபர்ஸ்ட் சிங்கிள்
Advertisement

நடிகர் விஜய் நடிக்கும்  ‘The Greatest of All Time’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. 

Advertisement

'லியோ'  திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில்,  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘The Greatest of All Time’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : ஒரே ஃபிரேமில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா – ‘ராயன்’ புதிய போஸ்டர் வெளியீடு!

'G.O.A.T.' திரைப்படம் நடிகர் விஜயின் 68-வது திரைப்படமாகும். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் படமாக்கப்பட்டு வருகிறது.  படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு விரைவில் அங்கு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் “நாளை சம்பவம் உறுதி” என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து 'G.O.A.T.'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவும் வெளியானது.இந்நிலையில், ‘The Greatest of All Time’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில், விஜய் குரலில் வெளியான இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement