பெரியாரின் நினைவு நாளான இன்று அவரின் சிந்தனைகளை முன்னெடுக்க உறுதி எடுப்போம் - கமல்ஹாசன்
பெரியாரின் நினைவு நாளில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரை நினைவு கூர்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். இவர் தன்னுடைய 94வது வயதில் 1973ம் ஆண்டு டிச.24ம் தேதி காலமானார். பெரியாரின் 50வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெரியாரின் நினைவு நாளில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரை நினைவு கூர்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில், பேதம் பார்ப்போருக்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிழைப்போர்க்கும், ஆணெனப் பெண்ணென ஆதிக்கம் செலுத்துவோருக்கும் இன்றைக்கும் சிங்கக் கனவாக இருக்கும் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவர்தம் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம். அவரது வீச்சு குறையாமல் இருக்க நம்மாலான பங்கை நல்குவோம், என்று தெரிவித்துள்ளார்.