பகத் சிங்கின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம் - பிரதமர் மோடி பதிவு!
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது. மார்ச் 23ம் தேதி 1931 அன்று பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதால், இந்த நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
Today, our nation remembers the supreme sacrifice of Bhagat Singh, Rajguru and Sukhdev. Their fearless pursuit of freedom and justice continues to inspire us all. pic.twitter.com/VHGn8G2i4r
— Narendra Modi (@narendramodi) March 23, 2025
"பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம். சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது". இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல் டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
Remembering Dr. Ram Manohar Lohia on his birth anniversary. A visionary leader, fierce freedom fighter and an icon of social justice, he dedicated his life to empowering the underprivileged and building a strong India. pic.twitter.com/zyvsuaKmRv
— Narendra Modi (@narendramodi) March 23, 2025
"தொலைநோக்குப் பார்வை கொண்ட தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாகத் திகழ்ந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் தனது வாழ்க்கையை பின் தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கும் அர்ப்பணித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.