”திரையரங்கம் செதரட்டும்...இது ஓஜி சம்பவம்தா” - ‘குட் பேட் அக்லி’ படத்தின் First single Promo வெளியானது!
விடா முயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – திரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. தொடர்ந்து சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதன்படி அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மாதம் இறுதியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் படத்தின் முதல் பாடலான ‘ஓஜி சம்பவம்’ நாளை(மார்ச்.18) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘ஓஜி சம்பவம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘திரையரங்கம் செதரட்டும் இவன் பேர் முழங்க கலக்கட்டும் பொடுசுங்கலாம் கதறட்டும் இது ஓஜி சம்பவம்தா’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.