குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை - கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!
குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை
கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா என்பவரின் குடியிருப்புக்குள் நுழைந்தது.
இந்த நிலையில், குன்னூர் மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படியுங்கள்:கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
மேலும், பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது தீயணைப்பு துறையை சேர்ந்த முரளி, குட்டி கிருஷ்ணன், கண்ணன், விஜயகுமார், வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார், திருநாவுக்கரசு உட்பட 7 பேரை தாக்கியது.
இவர்களை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சிறுத்தை பிடிக்கப்படாததால் குன்னூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.