For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை - மக்கள் அச்சம்!

05:42 PM May 25, 2024 IST | Web Editor
கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை   மக்கள் அச்சம்
Advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் சிறுத்தை வீட்டுக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி 55 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது.
இந்த வனப்பகுதி யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட
வன விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீ மதுரை கிராமப் பகுதியில் வனவிலங்குகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீ மதுரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சேமுண்டி கிராம பகுதியைச்
சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஆட்கள் இல்லாத
வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று இன்று மதியம் புகுந்துள்ளது. இந்நிலையில் விருமன் என்பவர் வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதை அறியாமல் தனது உடைமைகள் மற்றும் வேளாண் உபகரண பொருட்களை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் பதுங்கி
இருந்த சிறுத்தை முதியவரை மிகுந்த ஆக்ரோசத்துடன் தாக்க முயன்றுள்ளது.

சிறுத்தையிடமிருந்து தப்பித்த விருமன், சிறுத்தையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை எவ்வாறு பிடிக்க வேண்டும் என வனத்துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கால்நடை மருத்துவ குழு வரவழைக்கவும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே சேமுண்டி கிராமப் பகுதியில் ஆளில்லாத குடியிருப்பினுள் சிறுத்தை
நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement