Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரியலூர் முந்திரிக் காட்டில் முகாமிட்ட சிறுத்தை - பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

10:22 AM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

பொன்பரப்பி கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் சிறுத்தை ஒன்று முகாமிட்டுள்ள நிலையில்,  அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது பொன்பரப்பி கிராமம்.  இப்பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக
பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர்
பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று,  சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில்,  நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள்
நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்து உள்ளது.
இதனை மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்த புண்ணியகொடி மற்றும் அவரின் மகன்,  மகள் ஆகியோர் பார்த்து பயந்து வீட்டிற்கு ஓடிவந்து நடந்ததை கூறி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில்
இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.  அதில் சிறுத்தை, மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து,  கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர்.  பின்னர் செந்துறை போலீசார்,  தீயணைப்பு வீரர்கள்,  மற்றும் பொதுமக்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தை சுற்றி தேடினர். இதனால் அச்சமடைந்த சிறுத்தை மீண்டும் மருத்துவமனை அருகே இருந்த மருத்துவர் அறிவுச்செல்வன் வீட்டின் பின்புறமும் சென்றது.  இதனையடுத்து  போலீசார் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும்,  பொது மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில்
ஈடுபட்டு இருந்த சிறப்பு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  அவர்கள் இங்கு வந்து தெர்மல் ட்ரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர்.  ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.  இதனையடுத்து வனத்துறை
தீயணைப்புதுறை,  காவல்துறை ஆகியோர் தேடுதல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Tags :
AriyalurForest DepartmentleopardPonparappi
Advertisement
Next Article