For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாளவாடி அருகே மர்மமான முறையில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு!

09:52 PM Mar 31, 2024 IST | Web Editor
தாளவாடி அருகே மர்மமான முறையில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
Advertisement

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகே மர்மமான முறையில்
சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளது.

Advertisement

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் மர்மமான முறையில்
சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் உடலை மீட்டு
அதன் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைப்புலிகள் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால் சிறுத்தைப் புலி விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தைப்புலியின் உடற்கூராய்வுக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement