தூங்கிக்கொண்டிருந்த நாயை தாக்கிய சிறுத்தை.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. வீடியோ வைரல்!
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் அதிகாலை 2 மணியளவில் நாயை ஒன்று சாலையில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக நாயின் பின்னால் இருந்து ஓடிவந்த சிறுத்தை நாயின் கழுத்தை பிடித்தது. இதில் விழித்துக்கொண்ட நாய் சிறுத்தையின் பிடியில் இருந்த மீள போராடியது. கழுத்தின் பின்புறத்தை சிறுத்தை கவ்வியதால் நாயால் அதிலிருந்து மீள முடியவில்லை.
நாயின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து ஓடி வந்த மற்ற நாய்கள் துளியும் பயமில்லாமல் சிறுத்தையை தாக்கியது. இதனால் சிறுத்தையிடம் சிக்கியிருந்த நாய் தப்பி ஓடியது. பின்னர் அந்த சிறுத்தை மற்ற நாய்களை தாக்க முயன்றது. அப்போதும் அந்த நாய்கள் தப்பி ஓடாமல் சிறுத்தையை எதிர்த்து தாக்கியது. பினனர் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. பார்ப்பதற்கு சிறுத்தை ஒரு நாயை துரத்தி செல்வது போன்று இருந்தது.
இருப்பினும் மற்ற நாய்கள் விடாமல் அந்த சிறுத்தையை துரத்தியது. இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சியில் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவத்திற்கு பிறகு என்ன நடந்தது? என்ற தகவல் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், சிலர் ஒற்றுமையே பலம் என்வும் மற்றொருவர் நாய்களுக்கு கூட சிறந்த நண்பர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்தனர். வேறொருவர் வாழ்க்கையில் இதுபோன்ற உண்மையான நண்பர்கள் வேண்டும் என பதிவிட்டார்.