லியோ படம் உலகம் முழுவதும் ரூ.540 கோடி வசூல்!! தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
05:42 PM Oct 31, 2023 IST | Web Editor
Advertisement
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அந்த வகையில் 12 நாட்களில் உலகம் முழுவதும் 540 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது..