For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சொந்த நிறுவனத்தை தொடங்குகிறாரா லீ ஜே வூக்? - காதலை உறுதிப்படுத்திய நிலையில் வெளியான புதிய தகவல்!

08:17 AM Mar 01, 2024 IST | Jeni
சொந்த நிறுவனத்தை தொடங்குகிறாரா லீ ஜே வூக்    காதலை உறுதிப்படுத்திய நிலையில் வெளியான புதிய தகவல்
Advertisement

தென்கொரிய இசைக்குழு aespa-வின் உறுப்பினர் கரினாவுடனான காதலை உறுதிப்படுத்திய நிலையில், ‘தி ஆல்கெமி ஆஃப் சோல்ஸ்’ பிரபலம் லீ ஜே வூக் தனது சொந்த நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தென்கொரிய சீரிஸ்/ட்ராமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லீ ஜே வூக். ‘மெமரீஸ் ஆஃப் தி அல்ஃகம்ப்ரா’, ‘எக்ஸ்ட்ராடினரி யூ’, ‘தி ஆல்கெமி ஆஃப் சோல்ஸ்’ உள்ளிட்ட தொடர்களில் நடத்து பிரபலமான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ‘தி டெத்ஸ் கேம்’ சீரிஸில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது அவர் நடித்துள்ள ‘தி இம்பாஸிபில் ஹேர்’ தொடர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

திரைத்துறையில் இருப்பவர்கள் மற்ற திரை நட்சத்திரங்களை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாக நடப்பதுதான். அந்த வகையில், நடிகர் லீ ஜே வூக்கும் பிரபல கே-பாப் இசைக்குழுவான aespa-வின் உறுப்பினர் கரினாவை காதலிப்பதாக அண்மையில் செய்திகள் பரவின. இதுதொடர்பாக விளக்கம் அளித்த அவரது நிறுவனம் C-JeS, இருவரது காதலை உறுதிப்படுத்தியது.கொரிய திரைத்துறையில் லீ ஜே வூக் - கரினாவின் காதல் பேசுபொருளாகி வரும் நிலையில், மற்றொரு புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. தனது திரைப்பணிகளை நிர்வகிக்கும் நிறுவனமான ‘C-JeS Studios’ உடனான ஒப்பந்தம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், நடிகர் லீ ஜே வூக் தனது சொந்த நிறுவனத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

இது தொடர்பாக தென்கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், C-JeS Studios நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஏப்ரம் மாதத்தில் முடிய உள்ள நிலையில், நடிகர் லீ ஜே வூக் தனது சொந்த ஒரு-நபர் நிறுவனத்தை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து இந்த தகவல் குறித்து விளக்கமளித்துள்ள C-JeS Studios, தாங்கள் நிர்வகிக்கும் நடிகர், நடிகைகள் இன்னும் ஒப்பந்தத்தின்கீழ் திரைப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஒப்பந்தம் முடிய இன்னும் சிறிது காலம் இருப்பதால் தேவையற்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒப்பந்த முடிவு ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் கரினா உடனான காதலே, லீ ஜே வூக் தனது சொந்த நிறுவனத்தை தொடங்க உள்ளதற்கான காரணம் என பேசப்பட்டு வந்த நிலையில், C-JeS Studios-ன் விளக்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Tags :
Advertisement