For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லெபனான் #PagerExplosion - அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது எப்படி ? மொபைல் போனையும் வெடிக்க வைக்க முடியுமா?

08:24 PM Sep 18, 2024 IST | Web Editor
லெபனான்  pagerexplosion   அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது எப்படி   மொபைல் போனையும் வெடிக்க வைக்க முடியுமா
Advertisement

லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறிய நிகழ்வில் 9பேர் உயிரிழந்துள்ளனர். இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று லெபனானில் இயங்கி வரும் அமைப்பு ஹிஸ்புல்லா எனும் பெயர் கொண்ட அமைப்பாகும். கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வந்தது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த செய்தி பரிமாற்ற பேஜர்கள் நேற்றைய தினம் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேஜர் வெடிப்பில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 3000 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேஜர்கள் தயாரிக்கப்படும்போதே அதில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத்தின் சூழ்ச்சி உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சினிமாவில் வருவது போல் இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலை ஹேக்கிங் மூலம் செய்ய முடியும் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் கைகளிலும் உள்ள ஸ்மார்ட் போன்களை இதுபோன்ற ஹேக்கிங் மூலம் அடுத்தடுத்து வெடிக்க செய்ய முடியுமா என்ற கேள்வியே பலரை அச்சமூட்டியுள்ளது.

ஸ்மார்ட் போன்களையும் பேஜர்கள் வெடிக்கச் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேஜர்கள் போலல்லாதது போன்களை வெடிக்க வைக்கும் நடைமுறை கொஞ்சம் சிக்கலானது. பேஜர்களின் பயன்படுத்தப்படும் அதே லித்தியம் அயான் பேட்டரிகள் தான் சிமார்ட் போன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிக ஆற்றலை தக்கவைத்து கொள்வதால் லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதிக ஆற்றலை சேமிக்கும் என்றபோதே அதிக சூடேறும் மற்றும் வெடிக்கும் என்பதும் நிச்சயமாகிறது.

இதனால் தான் சிலநேரங்களில் அதிக சூட்டினால் போன்கள் வெடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் முன்கூட்டியே பேஜர்களில் வெடிமருந்து வைக்கப்பட்டிருப்பதையும் அதை ஒரே நேரத்தில் வெடிக்க வைக்க ரிமோட் மூலமான கோஆர்டிநேட்டிங் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

லெபனானில் நடைபெற்ற பேஜர் வெடிப்பு சம்பவத்தில் ஸ்பாட்வேர் மூலம் ஹேக் செய்யப்பட்டு லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு ஓவர் ஹீட் கொடுக்கப்பட்டு அதன்மூலம் வெடிமருந்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதே ஓவர் ஹீட்டிங் நடைமுறையை ஹேக்கிங் மூலம் பயன்படுத்தி பேஜர்களை விட அதிக சக்தி உடைய லித்தியம் அயர்ன் பேட்டரி கொண்ட போன்களையும் வெடிக்க வைக்க முடியும் என்கிற அதிர்ச்சிகரமான தகவல்களை நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

Tags :
Advertisement