“பெற்றோரை விட்டுவிடுங்கள்” - கொலையாளி சுர்ஜித்தின் சகோதரி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ!
சமீபத்தில் நடந்த கவின் கொலை வழக்கு சம்பவத்தில், கொலையாளி என அடையாளம் காணப்பட்ட சுர்ஜித்தின் சகோதரி, தனது பெற்றோரைப் தண்டிக்க வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில், "கவினுக்கும் எனக்கும் இடையிலான உறவு எங்களுக்கே மட்டுமே தெரியும். அதைப் பற்றி உண்மை தெரியாமல் யாரும் தவறாகப் பேச வேண்டாம். என் பெற்றோர்களுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மேலும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க நினைப்பது முற்றிலும் தவறு. தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள்," என்று அவர் உருக்கமாகக் கூறினார்.
சுர்ஜித்தின் சகோதரி, தனது குடும்பம் தற்போது அனுபவித்து வரும் மனவேதனையையும், சமூகத்தின் விமர்சனங்களையும் பற்றி பேசினார்.இந்தச் சம்பவம் தங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அளப்பரியது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நானும் கவினும் உண்மையாக தான் காதலித்தோம் எனவும் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் பேசி இருந்தோம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெற்றோரை மேலும் துன்புறுத்துவது நியாயமற்றது என்றும் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பல வகையான கருத்துக்களை பெற்று வருகிறது.