LCU அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ராகவா லாரன்ஸின் பென்ஸ்!
தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இதையடுத்து அவரின் படங்களுக்கு லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்(LCU) என்று ரசிகர்கள் பெயரிட்டனர். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் முதலில் உருவான திரைப்படம் கார்த்தியின் கைதி. இதையடுத்து கமல்ஹாசனின் விக்ரம் படம் யுனிவர்ஸில் சேர்க்கப்பட்டது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், அடுத்து வரவுள்ள LCU படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
தொடர்ந்து அந்த லிஸ்டில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இணைந்தது. அதன் பின்பு தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது யுனிவர்ஸில் பென்ஸ் படத்தை தயாரிப்பதாக அறிவித்தார். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. அதன் பின்னர், நீண்ட நாளாக இந்த படத்தின் அப்டேட் வெளியாகாமல் இருந்தது நிலையில், தர்போது அடுத்த கட்டதிற்கு நகர்ந்துள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மே.12) பூஜையுடன் தொடங்கியுள்ளது.