வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : ஒரு நபர் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை..!
சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்திரம், தனியார்மயமாக்கல் எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அப்போது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு நபர் ஆணையத்திற்கு தடை விதித்தது உத்தரவிட்டுள்ளனர்.