For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு - கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை... இருவர் விடுதலை!

03:50 PM Nov 19, 2024 IST | Web Editor
வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு   கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை    இருவர் விடுதலை
Advertisement

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து இடத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இவரும் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டராங்கும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

வழக்கறிஞர் காமராஜ் கொலை குறித்து சென்னை கொரட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2015 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி, உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த
2021 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 3 மாதத்தில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், “இந்த வழக்கை இவ்வளவு நாள் காலதாமதம் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்,” என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் மேற்கண்ட வழக்கில் இன்று மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பு வழங்கினார்.

இந்த கொலைவழக்கில் கல்பனாவிற்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், ஆனந்தன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

Tags :
Advertisement