Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டக்கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
06:47 PM Oct 13, 2025 IST | Web Editor
சென்னையில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Advertisement

சென்னை சேலையூரில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் மாவோ என்னும் மாணவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரி கட்டணமான ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்தில், ரூ.1லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் மீதி தொகையை கட்ட முடியவில்லை.

Advertisement

இதனை தொடர்ந்து  தான் செலுத்திய கட்டணத்தொகையை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் கட்டணத்தொகையை திரும்ப கொடுக்க மறுத்த கல்லூரி நிர்வாகமானது மாணவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவர் மாவோ இன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவரின் தற்கொலைக்கு சட்டக்கல்லூரி பேராசியர் நவீன் மற்றும் பதிவாளர் ஹரி பிரகாஷ் ஆகியோர் தான் காரணம் என குற்றம் சாட்டிய சக மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
ChennailatestNewsLawCollegelawstudentstudentsucideTNnews
Advertisement
Next Article