Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை - போலீசார் தீவிர விசாரணை !

11:12 AM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சித்ராவின் தந்தை காமராஜ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

சித்ராவின் தந்தையான காமராஜ் அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். சென்னை திருவான்மியூர் ராஜாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். அப்போது நீண்ட நேரமாக காமராஜ் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் காமராஜ் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் துறையினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
ActresscaseChennaiChitrafatherIncidentPoliceShockSuicide
Advertisement
Next Article