கடைசி டெஸ்ட் போட்டி- இந்தியா திணறல்!
இந்தியா ஆஸ்திரேலியா எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா திணறி வருகின்றது.
இந்தியா ஆஸ்திரேலியா பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, பும்ரா அணியின் கேப்டன் வழிநடத்தினார். இதில், 4 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டர்கள் திணறி வருகின்றனர்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தற்போது 68 ஓவர்களில் 175 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறி வருகின்றது. ஜெய்ஸ்வால் 10, கே.எல்.ராகுல் 4, கில் 20, மற்றும் கோலி 17 ரன்கள் என இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 3, ஸ்காட் போலாந்து 4 , நாதன் லயான் மற்றும் கம்மின்ஸ், ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.