ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 போட்டி - இந்திய அணி பேட்டிங்!
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அந்த அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. அதேபோல் மூன்றாவது போட்டியிலும் ஜிம்பாப்வே அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அடித்து விளையாடி அதிரடியாக ரன் எண்ணிக்கைய அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து 1 விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியானது ஜிம்பாப்வேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கி விளையாடி வருகிறது.