For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Laos | லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு!

11:42 AM Sep 01, 2024 IST | Web Editor
 laos   லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு
Advertisement

லாவோஸ் நாட்டில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே அமைந்துள்ள நாடு லாவோஸ். இந்த நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை உள்ளதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு, சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அந்நாட்டின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் போலி ஐடி நிறுவனங்களில் இந்தியர்கள் 47 பேர் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட தள்ளப்பட்டனர். இது குறித்து லாவோசில் செயல்படும் இந்திய தூதரத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

https://twitter.com/IndianEmbLaos/status/1829790146423898554

அப்போது, அங்கு சிக்கியிருந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 17 பேரை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இருந்து இதுவரை 635 இந்தியர்கள் இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement