For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் எப்போது தமிழ்நாடு திரும்புகிறார்கள்? - #Tamilnadu அரசு அறிக்கை!

06:06 PM Sep 15, 2024 IST | Web Editor
உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் எப்போது தமிழ்நாடு திரும்புகிறார்கள்     tamilnadu அரசு அறிக்கை
Advertisement

உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் ஓரிருநாட்களில் விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

"உத்தரகாண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தாவாகாட் பகுதியின் அருகில் சிக்கினர் என்பது குறித்து தகவல் பெறப்பட்ட உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்புகொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

அதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு. மீட்புப் பணிகளை கண்காணித்தனர். இதனை தொடர்ந்து, உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் காயம் ஏதுமின்றி, அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

இதையும் படியுங்கள் : Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (15.9.2024) காலை முகாம் அலுவலகத்திலிருந்து உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம் அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். யாத்திரை சென்ற தமிழர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து, உத்தரகாண்ட் அரசால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டு, முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தர்சுலா என்ற நகரத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் அங்கே ஓரிருநாட்கள் தங்கி, பின்னர் டெல்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள்" இவ்வாறு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement