Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு!

04:40 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதனால் வீடுகள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.  இதில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தரைமட்டமாகின.

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.  மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வந்தது.  தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 670 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags :
deathLand SlidePapua New Guinea
Advertisement
Next Article