பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு - 300 பேர் உயிரிழப்பு!
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
அக்கிராமத்தில் சுமார் 4000 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளதாவது;
"பேரிடர் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் 6 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.