For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு - மரங்கள் சாய்ந்து 6 பேர் உயிரிழப்பு!

இமாச்சல பிரதேச தலைநகர் குல்லுவில் உள்ள குருத்வாரா மணிகரன் சாஹிப் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
08:44 PM Mar 30, 2025 IST | Web Editor
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு   மரங்கள் சாய்ந்து 6 பேர் உயிரிழப்பு
Advertisement

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது மேலும் சில மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து.

Advertisement

இந்த நிலையில் இமாச்சல பிரதேச தலைநகர் குல்லுவில் உள்ள குருத்வாரா மணிகரன் சாஹிப் அருகே  இன்று(மார்ச். 30) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அம்மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் சுகு அறிவுறுத்தியுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement