#Brazil-ஐ புரட்டிப்போட்ட நிலச்சரிவு - 10 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் தென்கிழக்கில் மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இபாதிங்கா நகரில் நேற்று முன்தினம் இரவில் ஒரு மணி நேரத்தில் 80 மி.மீ. அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் கனமழையால் அப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் மண்ணுக்கு அடியில் புதைந்தனர்.
இதையும் படியுங்கள் : ஜம்மு காஷ்மீர் | சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் #Modi!
இச்சம்பவம் குறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நிலச்சரிவில் சிக்கி 8 வயது சிறுவன் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதவிர, அருகேயுள்ள சான்டனா டோ பரெய்சோ நகரில் இருந்து மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதன்மூலம், பிரேசிலில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
இதேபோன்று, அருகேயுள்ள பெத்தனியா நகரின் மலைப்பாங்கான பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலைச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 4 பேர் மீட்கப்பட் நிலையில் ஒருவரை இன்னும் மீட்கப்படவில்லை. நிலச்சரிவில் சிக்கி மாயமானவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.