'லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்' - எலான் மஸ்க்கிற்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை !
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சியில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு திறன்துறையின் (DOGE) தலைவராக எலான் மஸ்க்கை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான அரசு திறன்துறையின் (DOGE) குழு, லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆலோசனையை வழங்கியிருக்கிறது.
இது குறித்து எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "வரி செலுத்துவோர் பணத்தை மோசடி செய்வதையும் வீணாக்குவதையும் நிறுத்துவதற்கான ஒரே வழி, பணம் செலுத்துவோரின் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளை நிறுத்துவதுதான்" என்று தெரிவித்து இருந்தார். இதற்கு அனைவரும் கடும் விமர்சனத்தை தெரிவித்தனர்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பிற்கு மைக்ரோசாப்ட் ( MICROSOFT ) நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், "அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 1% க்கும் குறைவாகவே வெளிநாட்டு உதவிக்காக செலவிடுகிறது என்றாலும், இந்த நிதி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது.
ஆகவே சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூலமாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவக்கும்" என்று பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.