குவைத் தீவிபத்து - இறந்தவர்களின் உடல் ராணுவ விமானமூலம் நாளை டெல்லி கொண்டுவரப்படுகிறது!
09:36 PM Jun 13, 2024 IST
|
Web Editor
இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர அந்நாட்டின் ராணுவ விமானத்தை வழங்கியுள்ளார் குவைத் மன்னர் ஷேக் அல் சபா. மேலும் இந்த தீவிபத்தில் இறந்த இந்தியர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரபு நாடுகள் அல்லாத ஒரு நாட்டிற்கு ராணுவ விமானம் மற்றும் நிதியுதவி அளிப்பது இதுவே முதல்முறை ஆகும். அடையாளம் காணப்பட்ட 7 தமிழர்களின் உடல்களும் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. சிறப்பு விமானம் மூலம் வரும் உடல்கள் நாளை காலை டெல்லி வந்தடைந்து, அதன்பிறகு தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும்.
Advertisement
குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல் நாளை குவைத் ராணுவ விமான மூலம் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
Advertisement
குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல் நாளை காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது.
Next Article