For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் விவரம்...

03:35 PM Jun 13, 2024 IST | Web Editor
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் விவரம்
Advertisement

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  நேற்று அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.  இந்த  தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும்,  பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.  இதனிடையே,  தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும்,  மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் விவரம் வருமாறு:

1) மாரியப்பன்
த/பெ : வீராச்சாமி
(வயது 41)
முத்துராமலிங்க தேவர் தெரு,
வண்ணாரமுட்டி அஞ்சல்
தூத்துக்குடி.

2) ராஜூ
த/பெ : எபினேசர்
(வயது 55)
அண்ணாநகர்
திருச்சிராப்பள்ளி

3) சின்னதுரை
த/பெ : கிருஷ்ணமூர்த்தி
(வயது 42)
மேலத்தெரு
முட்டம்
கடலூர்

4) சிவசங்கர்
த/பெ : கோவிந்தன்
(வயது 50)
கார்ப்பரேஷன் காலனி முதல் தெரு
ராயபுரம்
சென்னை

5) புனாப் ரிச்சர்ட் ராய்
த/பெ : ஆனந்த மனோகரன்
(வயது 30)
கருப்பாமனை அஞ்சல்
பேராவூரணி
தஞ்சாவூர்

6) ராமு
த/பெ : கருப்பண்ணன்
(வயது 62)
பட்டணம் காத்தான்
ராமநாதபுரம

7) முகமது ஷெரிஃப்
(வயது : 37)
த/பெ : யாகூப் ஷெரிஃப்
சென்னை

Tags :
Advertisement