For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'குட்டி பிசாசே குட்டி பிசாசே' - ஹிப்ஹாப் ஆதியின் ‘PT Sir’ திரைப்பட முதல் பாடல் வெளியீடு!

09:55 PM May 07, 2024 IST | Web Editor
 குட்டி பிசாசே குட்டி பிசாசே    ஹிப்ஹாப் ஆதியின் ‘pt sir’ திரைப்பட முதல் பாடல் வெளியீடு
Advertisement

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள 'PT sir ' திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Advertisement

ஹிப்ஹாப் ஆதி தனது ஆரம்ப காலத்தில் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்தவர்2011 ஆம் ஆண்டு கலப்புல மப்புல பாடலின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை ஹிப்ஹாப் ஆதி தொடங்கினார். இந்த ஆல்பம் பாடல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் அனிருத் இசையில் ஒரு சில பாடல்களை பாடினார். பின்னர், சுந்தர் சி இயக்கிய 'ஆம்பள' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  அதனை தொடர்ந்து, தனி ஒருவன், கலகலப்பு, அரண்மனை 4 பாகங்கள், கதகளி, இன்று நேற்று நாளை உள்ளிட்டப் திரைப்படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி! - பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியாததால் கண்ணீர் மல்க பேட்டி!

இசையமைப்பாளரைத் தொடர்ந்து 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார்.  ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் மீசையை முறுக்கு , நட்பே துணை ஆகிய இரு திரைப்படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன.

இதையடுத்து, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பிடி சார்'. இந்த படத்தை ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபால் இயக்கி உள்ளார். காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்ந திரைப்படம் அவர் இசையமைக்கும் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்தின் குட்டி பிசாசு என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. குட்டி பிசாசே பாடல் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :
Advertisement