தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த #Kushboo - காரணம் இதுதான்!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்ததன் காரணம் குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
2010-ம் ஆண்டு திமுகவில் இருந்த குஷ்பு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குஷ்பு குரல் கொடுக்கவில்லை எனவும், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவ்வப்போது குஷ்பு மீது சர்ச்சை கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடித்ததை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும் தகவல் வெளியாகின. தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது நான் சுதந்திரமாக முழுமனதுடன் சேவையாற்ற முடியும். இன்று காலை (ஆகஸ்ட் 15), சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். தீவிர அரசியலில் இருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக உறங்குங்கள். என்னுடைய இந்த ரீ எண்ட்ரி நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக நடந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 பிப்ரவரி 28-ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்ற குஷ்பு, ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.