Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

11:44 AM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள்குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இருந்த போதும், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் அருவியில் ஆனந்த குளியலிட்டு வந்தனர்.  இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்போது போலீசார் தடை விதிக்கப்பட்டு இருந்தது.  

இச்சூழலில், குற்றாலம் அருவிகளில், ஐயப்ப பக்தர்களின் வருகையால் கூட்டம் அலைமோதியது. ஆண்டுதோறும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் குற்றாலத்திற்கு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகளில் ஐயப்ப பக்தர்களின் வருகையால் சீசன் களைகட்டியுள்ளது.

இந்நிலையில்,  அதிகாலை முதல் நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது.

Tags :
allowedAyyappadevoteesflowKurdala FallsRegularWater
Advertisement
Next Article