பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்! - திரளான பக்தர்கள் தரிசனம்!
பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் திருக்கோயிலில் யாக கலச பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா
தொடங்கி நடைபெற்றது. கலச நீரானது மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக
கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், கோபுர கலசங்களுக்கும் பவானி அம்மனுக்கும் பரிவார
தெய்வங்களுக்கும் கலச நீர் கொண்டு சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம்
நடத்தப்பட்டது.பின்னர் பத்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், பவானி அம்மனுக்கு சிறப்பு பிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : தமிழ் வளர்ச்சித் துறை விருது | சிறந்த நூல்கள்: ‘கதவு திறந்ததும் கடல்’ மற்றும் ‘தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்’ | சிறந்த பதிப்பகம்: ‘ஹெர் ஸ்டோரிஸ்’
இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பவானி அம்மனை தரிசனம் செய்தனர்.இதற்கிடையே, பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.