கள்ளழகர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா | முன்னேற்பாடுகள் தீவிரம்...
உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கியது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் மலையில் உலக பிரசித்தி பெற்ற
கள்ளழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் (23-ம் தேதி) நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து – சுரங்கத்தை கிடைமட்டமாக துளையிடும் பணி தீவிரம்..!
இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை பாரம்பரிய முறைப்படி துவங்கியது. இந்த யாகசாலையில் பழமை மாறாமல் அரளிமர கட்டைகளை கொண்டு ஒன்றோடு ஒன்று உராயச் செய்து அதில் எழும் தீப்பொறியை கொண்டு தீ மூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வேதபாராயணங்கள் முழங்க கள்ளழகர் பெருமானுக்கு யாக பூஜைகளை அங்குள்ள கோயில் பட்டர்கள் சிறப்புடன் செய்தனர்.
இந்த யாக பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 23-ம் தேதி நடக்க இருக்கும் கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.