Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பான் சர்வதேச பேட்மிண்டன் போட்டி - அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் #PVSindhu!

08:29 AM Nov 14, 2024 IST | Web Editor
Advertisement

ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றிப் பெற்றார்.

Advertisement

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், 38 நிமிடங்களில் 11, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானை இந்திய வீராங்கனை பிவி சிந்து வீழ்த்தினார். இதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் கனடா வீராங்கனை மிஷெல் செலியை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 32வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவோவிடம் 22-20, 17-21 16-21 என்ற கணக்கில் ஆட்டமிழந்தார். லக்ஷயா சென் போட்டியிலிருந்து வெளியேறியதால், போட்டிக் களத்தில் இருக்கும் இந்திய வீராங்கனையாக சிந்து மட்டுமே உள்ளார். 

Tags :
Indian shuttlerKumamoto Master Japan 2024Lakshya Senpv sindhu
Advertisement
Next Article