Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்!

08:22 AM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் இன்று தொடங்குகிறது.

Advertisement

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் இன்று தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சமீபகாலமாக தனது சிறந்த நிலைக்கு திரும்பும் முயற்சியில் தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த சிந்து அண்மையில் தனது பயிற்சியாளர் குழுவை மாற்றினார்.

இந்நிலையில், பி.வி. சிந்து ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் சவாலை தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை, சீன தைபேயின் ஹூ யின் ஹூய்-லின் ஜிக் யுன் ஜோடியுடன் மோதுகிறது.

இதையும் படியுங்கள் : இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!

ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), கோடாய் நராவ்கா (ஜப்பான்), பெண்களில் ஆசிய சாம்பியன் வாங் ஷி யி (சீனா), அகானே யமாகுச்சி (ஜப்பான்) போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்த போட்டியில் விளையாட உள்ளனர்.

Tags :
International Badminton TournamentJapanKumamoto MastersLakshya SenNews7TamilP.V. Sindhu
Advertisement
Next Article